திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை 10 வார்டு உறுப்பினர்கள் புறக்கணிப்பு :

பதிவு:2024-08-16 19:04:48



திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை 10 வார்டு உறுப்பினர்கள் புறக்கணிப்பு :

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை 10 வார்டு உறுப்பினர்கள் புறக்கணிப்பு :

திருவள்ளூர் ஆக 16 : திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் . இங்கு ஊராட்சி மன்ற தலைவராக லாசனா சத்யா என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இந் நிலையில் இவர் ஊராட்சிக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனவும் ஊராட்சி மன்ற தலைவி லாசனாவுக்கு பதிலாக அவரது கணவர் சத்யா ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் உள்ள தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஊராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசுவதாகவும் வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தகுந்த ஆதாரத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை மனு அளித்துள்ளனர் .

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இந்த ஊராட்சியில் 100 நாள் பணிகள் சரியாக வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி பெண்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்டம் முடிவதற்கு முன்பே புறப்பட்டு சென்ற நிலையில் ஒவ்வொருவராக அழைத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றதாக கையெழுத்து பெற்றதால் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் 10 லட்சத்திற்கும் மேல் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள வார்டு உறுப்பினர்கள் உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வித்துள்ளனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.