திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் கிராமத்தில் விஷ வண்டு கடித்து 6 வயது சிறுவன் பலி

பதிவு:2024-08-18 21:22:03



திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் கிராமத்தில் விஷ வண்டு கடித்து 6 வயது சிறுவன் பலி

திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் கிராமத்தில் விஷ வண்டு கடித்து 6 வயது சிறுவன் பலி

திருவள்ளூர் ஆக 17 : திருவள்ளுர் அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. விவசாயக் கூலி தொழிலாளியான இவரது மகன் கார்த்திக் கிரிஷ் (6). இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு பயின்று வந்தான்.

இந்நிலையில் கார்த்திக் கிரிஷ் நேற்று 16ஆம் தேதி வீட்டின் வெளிபுறம் விளையாடிக் கொண்டிருந்த போது விஷ வண்டு கடித்து வலியால் துடித்தான். இதனால் கார்த்திக் கிரிசை சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் கிரிஷ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து செவ்வாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

6 வயதானாலும் துருதுருவென்று ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் விஷவண்டு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.