பூண்டி நீர்த்தேக்கத்தில் பருவ மழைக்கு முன்பாக இந்த மணல் போக்கி கதவணைகளை செம்மையாக நிறுவப்பட வேண்டும் என்பதற்காக வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு பணிகள் : நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்:

பதிவு:2024-08-20 10:28:57



பூண்டி நீர்த்தேக்கத்தில் பருவ மழைக்கு முன்பாக இந்த மணல் போக்கி கதவணைகளை செம்மையாக நிறுவப்பட வேண்டும் என்பதற்காக வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு பணிகள் : நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்:

பூண்டி நீர்த்தேக்கத்தில் பருவ மழைக்கு முன்பாக இந்த மணல் போக்கி கதவணைகளை செம்மையாக நிறுவப்பட வேண்டும் என்பதற்காக வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு பணிகள் : நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்:

திருவள்ளூர் ஆக 19 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நகரியாறு மற்றும் நந்தியாறு ஆகிய இரு நதிகளும் சேர்ந்து கொசஸ்தலையாற்றுக்கு நீர்வரத்து வழங்குகிறது.மேலும் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலம் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 12 டிஎம்சி தண்ணீர் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு, பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இணைப்பு கால்வாய் மூலம் புழல் மற்றும் செம்பரம்ப்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சென்னை குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது.தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் மொத்தம் 16 கதவணைகள் உள்ளன. இதில் 8 மற்றும் 9 ஆகிய இரண்டும் மணல்போக்கி கதவணைகளாகும். இக்கதவணைகளுக்கான செப்பனிடும் பணி 2020-ஆம் ஆண்டு அரசாணையின்படி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

ஆனால் நீர்த்தேக்கத்தில் 105 அடிக்கு தண்ணீர் குறைந்திருந்தால் மட்டுமே மணல் போக்கி கதவணைகளை இறக்க முடியும் என்ற நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பூண்டி நீர்த்தேக்கத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் இருப்பு இருந்து கொண்டே இருந்ததால், மணல் போக்கி கதவணைகளை இறக்க முடியாத சூழல் உள்ளது.தற்போது பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பட்டுள்ளதால், தற்போது நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் வரவிருக்கும் பருவ மழைக்கு முன்பாக இந்த மணல் போக்கி கதவணைகளை செம்மையாக நிறுவப்பட வேண்டும் என்பதற்காக போர்க்கால அடிப்படையில் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது.தவிர மீதமுள்ள 14 மதகுகளின் கதவணைகளுக்கு ரப்பர் சீல் மாற்றுவது, ரோலர் அமைப்பு சீர் செய்வது மற்றும் கதவணைகள் துருபுடிக்காமல் இருப்பதற்கான பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகிறது. எனவே 2024 வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பணிகள் யாவும் முடிக்கப்பட்டு, பூண்டி நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.