அருள்மிகு தர்மராஜா சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் தீமிதி விழா: 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர் :

பதிவு:2024-08-21 11:57:14

திருவள்ளூர் ஆக 21 : திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு தர்மராஜா சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றறத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. இவ்விழாவையொட்டி நாள்தோறும் அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நடைபெற்றது. இதில், 250-க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைறவேற்றினர். இவ்விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராமானோர் பங்கேற்றனர்.இதில் பங்கேற்ற அனைவருக்கும் பூ பழம் மற்றும் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.