பதிவு:2024-08-21 11:59:05
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 23 ம் தேதி தேசிய குடற்புழு நீக்க நாள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஆக 21 : குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை, இரத்த சோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு முதலிய பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள்.23.08.2024 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதற்கான முகாம் வரும் 23.08.2024 அன்று நடைபெறும். அதில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 30.08.2024 அன்று நடைபெறும்.
முகாமில் குடற்புழு நீக்கத்திற்காக அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 1 முதல் 5வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் பள்ளிச் செல்லாத 1 முதல் 19 வயதுவரை அனைத்து குழந்தைகள் 20 - 30 வயதுடைய பெண்கள் (கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர), அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும், பள்ளியில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் அல்பெண்டசோல் மாத்திரை விகிதத்தின்படி மையத்தில் வழங்கப்படும்.
1 முதல் 2 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு - அல்பெண்டசோல் 1/2 மாத்திரை (200 mg), 2 முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு -அல்பெண்டசோல் 1 மாத்திரை (400 mg), 20 முதல் 30 வயதுவரை உள்ள பெண்களுக்கு (கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அல்பெண்டசோல் 1 மாத்திரை (400 mg) ஆகும்.
மொத்த பயனாளிகள் குழந்தைகள் -775834, பெண்கள் – 267105. அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1428 பள்ளிகளிலும், 443 தனியார் பள்ளிகளிலும், 79 கல்லூரிகளிலும், 1754அங்கன்வாடி மையங்களிலும் மொத்தம் 3704 மையங்களில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என மொத்தமாக 4322 பணியாளர்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுப்பட்ட குழந்தைகளுக்கு 30.08.2024 அன்று அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. எனவே அனைவரும் இந்த குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.