உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொன்னேரி வட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2024-08-22 15:25:28



உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொன்னேரி வட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொன்னேரி வட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் ஆக 22 : திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட அலமாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு , வெளி நோயாளிகள் பிரிவு, மருந்துகள் இருப்பு, மகப்பேறு பிரிவு ஆகிய பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டு சுகாதார நிலையத்தினை சுத்தமாகவும் சுகாதாரமும் வைத்துக் கொள்ள வேண்டும் பயன்பாடற்ற தேவையில்லாத உபகரணங்களை வேறொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றி அமைக்கவும், மருத்துவமனையை சுற்றி சுற்று சுவர் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அலமாதி ஊராட்சி மன்ற அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வழங்கப்படும் உணவுகள், குழந்தைகள் எடை, உயரம் ஆகியவைகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு வீடு கட்டுவதற்கான மூலப்பொருளுக்கான செங்களுக்கு பதில் சிமெண்ட் கற்களால் கட்டப்பட்டு வரும் பணிகளின் தன்மையே கேட்டறிந்தார்.தொடர்ந்து பழைய அலமாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.69.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டடத்தினை பார்வையிட்டார்.பின்னர் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் எடப்பாளையம் கிராமத்தில் புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

விஜயநல்லூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொன்னேரி வட்ட செயல்முறை கிடங்கில் உணவுப் பொருட்களின் இருப்பு பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவைகளின் இருப்பு, தரம் குறித்து பகுப்பாய்வு மேற்கொள்ள படுவதை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செங்குன்றம் நாராவாரி குப்பத்தில் உள்ள புழல் ஏரியில் பொதுப்பணித்துறை சார்பில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக செயல்படுத்தப்படும் பணிகளை பார்வையிட்டு தடுப்பு பணிகளுக்காக ரூ 10.1 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் பாட முறைகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பாடியநல்லூர் -II நியாய விலைக் கடையில் பொருட்களின் தரம் அதன் அளவு விரல் ரேகை பதிவேடு விரல் ரேகை பதிவு செய்யாது நபர்களின் எண்ணிக்கை இருப்பு பதிவேடு ஆகியவைகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சென்னை சுற்றுவட்ட சாலை திட்டத்தின் கீழ் ஜெகநாதபுரம்- II மேம்பாலம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு அதன் செயல் திட்டங்களை ஆட்சியர் கேட்டறிந்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார். பொன்னேரி சார் ஆட்சியர் வாஹே சங்கத்,பல்வந்த், உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ்குப்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், உதவி இயக்குநர் ஊராட்சி பரணி. உதவி இயக்குநர் பேருராட்சி ஜெயகுமார், தனித்துணை ஆட்சியர்(சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் , பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன். சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கம் ,சாந்தினி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.