பதிவு:2024-08-22 15:29:23
திருவள்ளூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஆக 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் சி.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் என்.ஸ்ரீநாத்,பி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொது செயலாளர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மேம்படுத்தி எத்தனால் உற்பத்தி மற்றும் இணைமின் உற்பத்தி நிலையம் அமைத்திட ரூ.192 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய கரும்பு டன் 1 க்கு ரூ.4000 வழங்க வேண்டும்,தேசிய கரும்பு மேம்பாட்டு நிதியகத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்ற கடனில் தமிழக அரசு செலுத்திய ரூ.9.50 கோடி போக மீதமுள்ள ரூ.16.32 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்,சர்க்கரை விற்பனையில் உள்ள கோட்டா முறையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சங்க நிர்வாகிகள் புஸ்பேந்திர தியாகி,ப.துளசி நாராயணன்,தமிழரசன்,சாமி.நடராஜன், சம்பத் அப்சல் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.இறுதியாக மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.