பதிவு:2024-08-22 15:31:33
திருவள்ளூர் அருகே செல்போனில் ரம்மி விளையாடி ரூ.20 லட்சம் பறிபோனதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை :
திருவள்ளூர் ஆக 22 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தில் வசித்து வந்தவர் மகேந்திரன் ( வயது 31) இவர் பூண்டி அருகே ஒதப்பை கிராமத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். மகேந்திரனும் அவரது மனைவி சந்தியா (28) விற்கும் திருமணமாகி ஒன்றறை வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இவர்கள் இருவரும் கைவண்டூர் கிராமத்தில் உள்ள சந்தியாவின் அம்மா வீட்டில் வசித்து வந்தனர். இங்கிருந்து தான் மகேந்திரன் வேலைக்கு செல்வாராம்.
இந்நிலையில் வேலை முடிந்ததும் மகேந்திரன் ஆன்லைனில் ரம்மி விளையாட்டும் விளையாடுவாராம், இதில் அவருக்கு ரூ.20 இலட்சம் பறிபோனதால் கொஞ்சம் கடன் ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் மகேந்திரன் தனது பெற்றோரிடம் சென்று எனக்கு கடன் ஆகிவிட்டது. ஆகையால் பணம் தேவைப்படுகிறது. அதை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர்கள் நீ உன் மனைவியை இங்கு கூட்டிக்கொண்டு வா பணம் ஏற்பாடு செய்து தருகிறோம் என கூறியுள்ளனர்.பின்னர் மகேந்திரன் அவரது மனைவியை தன் தாய் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்
ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதனால் மன வேதனை அடைந்த மகேந்திரன் தாய்வீட்டில் அம்மாவின் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் , தகவல் அறிந்த பென்னாலூர்பேட்டை போலிசார் சம்பவயிடத்திற்கு வந்து மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.இது குறித்து பென்னாலூர் பேட்டை போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.