பதிவு:2024-08-22 15:34:25
திருவள்ளூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் திருட்டு : டவுன் போலீசார் விசாரணை :
திருவள்ளூர் ஆக 22 : திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (40). இவர் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே புதிய செல்போன் மற்றும் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று 20ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்த பொழுது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த. கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் உதிரி பாகங்கள், ரூ. 2000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புருஷோத்தமன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.