பதிவு:2024-08-22 15:41:50
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை 16 நாட்கள் நீட்டிப்பு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஆக 22 : கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்க்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை தற்போது மேலும் 16 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2024 ஆகும். இதில் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சியில் சேர்ந்து உடனடி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்
மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இலவச மிதிவண்டி, காலணிகள், பாடப்புத்தகம், வரைபட உபகரணங்கள், சீருடைகள், சீருடைகளுக்கான தையற் கூலி மற்றும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750 புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகையும் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் அவர்களை நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9444224363, 9486939263 மற்றும் 9444139373 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.