திருவள்ளூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-08-23 15:50:14



திருவள்ளூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் ஆக 23 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில் குமரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சே.ஜோதி,இணைச்செயலாளர் எஸ்.ரிஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டத் தலைவர் இரா.குமரன் வரவேற்றார்.

இதில் மாவட்ட செயலாளர் கொ.மெல்க் ராஜா சிங்,மாவட்ட தலைவர் இளங்கோவன் கோரிக்கை விளக்கவுரை யாற்றினர். மேலும் மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா. குபேரன் சிறப்புரையாற்றி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

அப்போது, தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை தரம் உயர்த்த வேண்டும். இதற்கான கோப்பின் மீது ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு நிதித்துறை செயலர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நில அளவை பதிவேடுகள் துறையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இறுதியாக கோட்ட பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார்.