பதிவு:2024-08-23 15:54:53
கோடைகால மழையால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் : ஆணையர் திருநாவுக்கரசு வழங்கினார் :
திருவள்ளூர் ஆக 23 : திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. 425-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.தற்போது பருவமழை தொடங்க இருப்பதால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்வது. கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றுவது. கால்வாய் கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி பணியாளர்களுக்கு அதற்கான உபகரணங்களை வழங்க நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் அறிவுறித்தினர்
இதனையடுத்து நகர்மன்ற தலைவரின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆணையர் திருநாவுக்கரசு 44 நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு கால்வாய் தள்ளும் கரண்டி, பூட்ஸ் ,மாஸ்க் , கத்தி, டார்ச் லைட் , மருந்து அடிக்கும் இயந்திரம், கையுறை ஆகியவற்றை வழங்கினார்.இதில் இளநிலை பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உட்பட நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.