பதிவு:2024-08-23 16:00:48
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஆக 23 : பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமாக ஜனவரி 24-ல் மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விருதினை பெற திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயதிற்குமேல் 18 (31 டிசம்பர்-ன்படி) வயதிற்குட்பட்டபெண்குழந்தை,கீழ்கண்டவற்றில் வீரதீர செயல் புரிந்திருக்க வேண்டும்,பிறபெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண்குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்,வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல்,பெண்களுக்கு எதிரான சமூக அலுவலகங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்,ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
விருது மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்காண் அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒருபெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பாராட்டு பத்திரம்,ரூ.1,00,000 காசோலைவழங்கப்படும்.தேர்வுக்குழு மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை கூர்ந்தாய்ந்து மேற்காண் விருதினை பெற உரிய நபரை தேர்ந்தெடுக்கப்படுவார்.
விருதினை பெற உரிய முதன்மை கல்வி அலுவலர்,மாவட்டகல்வி அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாவட்ட திட்டஅலுவலர் மற்றும் காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்களிடம் விபரமறிந்து பரிந்துரைக்கலாம். பரிந்துரையில் குழந்தையின் பெயர், தாய்/தந்தை முகவரி, ஆதார்எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாதகுறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்படவேண்டும்.
மேலும் 2025-ஆம் ஆண்டு பெண்குழந்தைகள் தின மாநில விருதுக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி (https://awards.tn.gov.in),இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:30.09.2024.இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை முழுமையாக பூர்த்திசெய்யவேண்டும். இணையதளத்தில் பதிவு செய்தபிறகு அனைத்து ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு, கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிடவேண்டும்.
மேலும் பொருளடக்கம் மற்றும் பக்க எண், இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் உயர்தரவு சுயசரிதை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (தமிழ் – மருதம் மற்றும் ஆங்கிலம்), தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன்விவரம் / விருதின்பெயர் / யாரிடமிருந்து பெறப்பட்டது மற்றும் பெற்ற வருடம்)கையேட்டில் விருது பெற்றபுகைப்படம், சான்றிதழ் இணைக்கப்படவேண்டும்.
சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவைபாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு. இணைப்பு – படிவம் ( தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) முழுமையாக பூர்த்தி செய்து இணைக்கப்பட வேண்டும் போன்றவை கையேட்டில் இணைக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.