பதிவு:2022-03-15 20:37:59
மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?இதுகுறித்து, தி.மு.க., வினர் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், தி.மு.க.,விற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. மேயர், துணை மேயர் பதவி கிடைக்காத, தலைமைக்கு நெருக்கமான சீனியர்கள் பலர், மண்டல குழு தலைவர் பதவியை எதிர்பார்த்து, அமைச்சர், மாவட்ட செயலர்களை வலம் வருகின்றனர். அவர்களிடம் லட்சங்களை தாண்டி, கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுகிறது.

தி.மு.க.,வினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே போட்டி நிலவுவதால், மாநகராட்சியின் மண்டலங்களை அதிகரிக்க வேண்டும் என, தலைமையிடம் கோரிக்கையும் வைத்துள்ளோம்.குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 21 சட்டசபை உள்ளது. ஒரு சட்டசபைக்கு ஒரு மண்டலம் அல்லது 200 வார்டுகளில் 10 வார்டுக்கு ஒரு மண்டலம் வரும்போது, நிர்வாகம் மேம்படும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என, தெரிவித்துள்ளோம். அதேநேரம், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கலுக்கு முன், மாநகராட்சி கூட்டம் நடக்க வேண்டும். அதற்கு முன், மண்டல குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டு, மண்டல அளவிலான கூட்டம் நடத்தப்பட வேண்டும்.எனவே, மண்டல குழு தலைவர் தேர்வு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த மண்டல குழு தலைவர் பதவி கிடைக்காதவர்கள் பலர், நிலைக்குழுக்கள் தலைவருக்கும் அடித்தளம் போட்டு வைத்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.