தெலுங்கு நடிகை ஜீவிதா - ராஜசேகர் மீதான 13 கோடி ரூபாய்க்கான செக் மோசடி வழக்கை வருகிற 30-ஆம் தேதிக்கு திருவள்ளூர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு

பதிவு:2022-05-27 12:28:46



தெலுங்கு நடிகை ஜீவிதா - ராஜசேகர் மீதான 13 கோடி ரூபாய்க்கான செக் மோசடி வழக்கை வருகிற 30-ஆம் தேதிக்கு திருவள்ளூர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு

தெலுங்கு நடிகை ஜீவிதா - ராஜசேகர் மீதான 13 கோடி ரூபாய்க்கான செக் மோசடி வழக்கை வருகிற 30-ஆம் தேதிக்கு திருவள்ளூர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு

திருவள்ளூர் மே 27 : பிரபல தெலுங்கு நடிகை ஜீவிதா ராஜசேகர் ரெட்டி கடந்த 2017 ஆம் ஆண்டு கருடவேக என்ற தெலுங்கு திரைப்படம் தயாரிப்பதற்காக பட தயாரிப்பாளரும் நிதிநிறுவன உரிமையாளரான கோட்டீஸ்வர ராஜூ - ஹேமா தம்பதியிடம் சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகிலுள்ள தெலுங்கு நடிகர் ராஜசேகருக்கு சொந்தமான நிலத்திற்கான ஆவணங்களை அவர்களிடம் அளித்து 13 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.ஆனால் கடன் பெற்று வட்டியும் கட்டாமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் 4 வருடங்களாக அவர்களுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சினிமா படம் தயாரிப்பதற்காக வாங்கிய 13 கோடி ரூபாய் பணத்திற்கான செக்கை கோடீஸ்வர ராஜீ மனைவி ஹேமா பெயரில் கொடுத்துள்ளனர். ஆனால் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இது குறித்து அவர்களிடம் மீண்டும் கேட்ட போது எந்தவித பதிலும் அளிக்காமல் அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அடமானமாக கொடுத்த நிலத்தை நடிகர் ராஜசேகர் சுதாகர் ரெட்டி என்பவருக்கு ஏற்கனவே விற்பனை செய்தது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து செக் மோசடி செய்த நடிகை ஜீவிதா ராஜசேகர் மீது திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை்ககு வந்தபோது நடிகை ஜீவிதா ஆஜராகாமல் தனக்கு உடல் நலம் சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என வழக்கறிஞர் மூலம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

இதனால் இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 30-ஆம் தேதி திருவள்ளூர் நீதிமன்றம் தள்ளிவைத்து நீதிபதி செல்வ அரசி உத்தரவிட்டார். மேலும் இதே போன்று நடிகை ஜீவிதா ராஜசேகர் மீது ஆந்திர மாநிலம் நகிரி நீதிமன்றத்திலும் செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.