திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் இராணுவ படைவீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல் ஆளிநர்களுக்கான ஆள்தேர்வு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-08-23 16:04:20

திருவள்ளூர் ஆக 23 : திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 17 கோவில் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள தகுதியான முன்னால் இராணுவ படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதாந்திரம் ரூ.7,500 வழங்கப்படும்.விண்ணப்பதாரர் இராணுவம் அல்லது தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர் அவரது பணிக்காலங்களில் குற்றநிகழ்வு காரணமாக பணிநீக்கம் மற்றும் பணிவிலக்கம் பெற்றிருத்தல் கூடாது.விண்ணப்பதாரர் குற்றவழக்குகளில் எதிலும் ஈடுபட்டிருத்தல் கூடாது.திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் விண்ணப்பதாரரின் இருப்பிட முகவரி உள்ளவர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.விண்ணப்பதாரர் முன்னாள் இராணுவ படை வீரராக இருப்பின் வயது வரம்பு 60 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தகுதி உள்ள அனைவரும் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக தபால் பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன் ஆதார் அட்டை,பணிஓய்வு பெற்றமைக்கான சான்றிதழ் தற்போதைய புகைப்படம்-2 (பாஸ் போட்டோ சைஸ்) ஆகிய ஆவண நகல்கள் இணைக்க வேண்டும்.விண்ணப்பங்கள் 20.09.2024 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் தக்க ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.