திருவள்ளூரில் மேயர் தயான்சந்த் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-08-27 15:19:13



திருவள்ளூரில் மேயர் தயான்சந்த் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூரில் மேயர் தயான்சந்த் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஆக 27 : திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக மேயர் தயான்சந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 29தேதி வரை தேசிய விளையாட்டு தினமாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது

இதனை முன்னிட்டு இவ்வான்டும் 29.08.2024 அன்று திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி U-19 - Men & Women Men Volleyball / Hockey / Football (any one ) & 100M Run, U-25 - Men & Women Men Basketball,U-45 - Men & Women Men 1KM Walk/ 50mts/100 mts/ Chess / Carrom.

இப்போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் / பள்ளி – கல்லூரி மாணவ / மாணவியர்கள் கலந்துக்கொள்ளலாம். 29.08.2024 அன்று காலை 7.00 மணிக்கு போட்டிகள் நடைபெறும் இப்போட்டியில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் 28.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703482 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடப்பு கொள்ளலாம்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் , பள்ளி கல்லூரி மாணவ/ மாணவியர்கள் இப்போட்டியில் கலந்துக்கொண்டு தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாட வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.