பட்டாபிராமில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-08-27 15:20:51



பட்டாபிராமில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பட்டாபிராமில் தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஆக 27 : தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2024 – 2025 –ம் ஆண்டில் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, வேலைவாய்ப்பு முகாம் 31.08.2024 அன்று காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் வழங்கக் கூடிய முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்துக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளனர்.இம்முகாமிற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதி 10, 12, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ, பட்டயப்படிப்பு, DDU-GKY பயிற்சி முடித்தவர்கள், டெய்லரிங் தொழில் கல்வி பயின்ற ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிய வயது, கல்வித் தகுதி முதலான முக்கிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற நல்லதொரு வேலைவாய்ப்பினை பெற்றிடவும், இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,திருவள்ளூர் மாவட்டம்.தொலைபேசி எண் - 044 – 27664528 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.