திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-05-27 12:31:13



திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மே 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ஏ.சிவா தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர் சி.மலர்கொடி, என்.மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் வெங்கேடசன் வரவேற்புரை வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர் மாநில துணைச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் கே.ஆர்.சுலோச்சனா கோரிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அப்போது, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு அந்தந்த மையங்களில் காலை சிற்றுண்டியை தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 58 முதல் 60 வயதாக உயர்த்தியை போல் சத்துணவு ஊழியர்களின் பணிக்காலத்தை 60 லிருந்து 62 ஆக உயர்த்தவும் வேண்டும். மேலும், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கவுள்ள நேரத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் ஆர்.குணசுந்தரி நன்றி கூறினார்.