திருவள்ளூரில் நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தட வாகன சேவை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

பதிவு:2024-08-29 12:29:44



திருவள்ளூரில் நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தட வாகன சேவை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூரில் நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தட வாகன சேவை : மாவட்ட ஆட்சியர்  த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஆக 28 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தட வாகன சாவியினை ஓட்டுநர்களுக்கு வழங்கி சேவையினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வரால் 21.08.2024 அன்று இத்திட்டத்தினை துவக்கி வைத்து 200 நடமாடும் கால்நடை மருந்தக வாகனங்களுக்கு கொடி அசைத்து அனுப்பி வைத்தார். அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 வாகனங்கள் பெறப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வழங்கும் விதமாக 1 இலட்சம் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1 நடமாடும் கால்நடை மருந்தகம் வீதம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மொத்தம் 14 ஒன்றியம் உள் அடக்கி 6 நடமாடும் கால்நடை மருந்தக ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாகனங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தட வாகன சாவியினை ஓட்டுநர்களுக்கு வழங்கி சேவையினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.

இதில் திருவள்ளூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சீனிவேலன், உதவி இயக்குநர்கள் உமா, சுமதி நிர்வாக அலுவலர்கள் அன்பழகன் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.