திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் அட்டைப்பெட்டி தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லரில் தவறி விழுந்த இளைஞர் உயிருக்கு போராட்டம் :

பதிவு:2024-08-29 12:31:30



திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் அட்டைப்பெட்டி தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லரில் தவறி விழுந்த இளைஞர் உயிருக்கு போராட்டம் :

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் அட்டைப்பெட்டி தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லரில் தவறி விழுந்த இளைஞர் உயிருக்கு போராட்டம் :

திருவள்ளூர் ஆக 28 : திருவள்ளூர் அடுத்த வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் சீனிவாசன் (29).இவர் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு எங்கும் செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் உள்ள ஸ்டார் பாக்ஸ் என்ற அட்டைப்பெட்டி மற்றும் தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு குடி போதையில் வந்துள்ளார் சீனிவாசன் .

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியும் கேட்காமல் தொழிற்சாலைக்குள் புகுந்த சீனிவாசன் அங்கும் இங்குமாக திரிந்து கொண்டிருந்தார்.அப்போது கொதிக்கும் பாய்லர் அருகே சென்றபோது ஊழியர்கள் சத்தம் போட்டும் கேட்காமல் கொதிகலன் மீது ஏறி அதன் மீது போடப்பட்டிருந்த வலை மீது நடந்து சென்றுள்ளார். இதனால் வலை அறுந்து சீனிவாசன் விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் காவலர்கள் அவரை மீட்டனர். ஆனால் உடல் முழுவதும் வெந்த நிலையில் மீட்க்கப்பட்டு பூந்தமல்லி தண்டலம் தனியார் மருத்துவமனையில் 90 சதவீதம் காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு சீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து தகவல் அறிந்த மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரித்த போது, இங்கு சீனிவாசன் வேலை செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் குடிபோதையில் தொழிற்சாலைக்குள் புகுந்த சீனிவாசன் காவலர்கள் தடுத்தும் அவர்களிடம் சண்டை போட்டுவிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்து தொழிற்சாலை முழுவதும் சுற்றி வந்ததை தடுத்தும் கேட்காமல் திடீரென கொதிகலன் மீது ஏறி அதன் வலை துருப்பிடித்த நிலையில் இருந்ததால் உடைந்து உள்ளே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து சீனிவாசனின் தாய் கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.