பதிவு:2024-08-29 12:34:20
புல்லரம்பாக்கம், பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகள் திருடிய பெயிண்டர் கைது :
திருவள்ளூர் ஆக 28 : திருவள்ளுர் அடுத்த புல்லரம்பாக்கம், பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகள் அடிக்கடி காணாமல் போனது. இது குறித்து ஆட்டின் உரிமையாளர்கள் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந் நிலையில் காந்திநகர் பகுதியை சேர்ந்த அருண் என்பவரின் 2 ஆடுகள் காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் தலக்காஞ்சேரி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் இந்த ஆடுகள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் என்பதும் பெயிண்டராக தலகாஞ்சேரி பகுதியில் தங்கி வேலை பார்த்ததும், போதிய வருமானம் இல்லாததால் ஆடுகளை திருடி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து காந்தி நகர் அருண், ஒதிக்காடு சுமதி ஆகியோருக்கு சொந்தமான 4 வெள்ளாடுகளை திருடிய பெயிண்டர் செல்வத்தைபோலீசார் கைது செய்து அவரிடமிருந்து 4 ஆடுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.