பதிவு:2024-08-29 12:40:53
பாப்பரம்பாக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் : 290 பயனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் ஆக 29 : திருவள்ளூர் மாவட்டம், மற்றும் வட்டம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில் 50 வருடத்திற்கு மேலாக பட்டா பெறாமல் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சென்னை பெருநகர் குழுமம் திட்டத்தில் இருந்ததால் அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் வருவாய் துறையின் மூலம் கணக்கெடுக்கும் பணி எடுக்கப்பட்டு கிராம நத்தம் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
உங்கள் கிராமப்புறங்களில் உள்ள குப்பைகளை தரம் பார்த்து மக்கும் குப்பை மக்கா குப்பை என்று தூய்மை பணியாளர்களிடம் பிரித்து வழங்க வேண்டும் உங்களுடைய சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் திறந்தவெளி கழிப்பறையினை பயன்படுத்துவதே தவிர்க்க வேண்டும்.சுற்றுபுறங்களில் உள்ள நீரினை தேங்க விடாமல் டெங்கு போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் உங்களுடைய குழந்தைகள் கல்லூரி படிப்பு வரை தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் வாயிலாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு கிராம நத்தம் பட்டாவும், 123 பயனளிகளுக்கு ரூ.1,33,89,947 மதிப்பீட்டில் இலவச பட்டாக்கான ஆணையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.11,26,776 மதிப்பீட்டில் பட்டாவும், 5 பயனாளிகளுக்கு ரூ.33, 450 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், சமூக பாதுகாப்பும் திட்டம் மற்றும் இதர சான்றுகள் 16 பயனாளிகளுக்கு ரூ.34,400 நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1,525 மதிப்பீட்டில் வேளாண் கருவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.600 பழச்செடிகள் தொகுப்பு ஆக மொத்தம் 290 பயனாளிகளுக்கு ரூ.1,45,86,698 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.முன்னதாக பல்வேறு துறையில் இருந்து திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினன மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதில் தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், இணை இயக்குனர் வேளாண்மை முருகன் , உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரணி திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்