திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பின்னால் பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மோதி விபத்து : 10 பேர் காயம் :

பதிவு:2024-08-29 12:45:07

திருவள்ளூர் ஆக 29 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த அரும்பாக்கம் பகுதியில் இருந்து கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள சாய் கார்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு 12 பெண்கள் வேன் மூலம் பணிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளூர் அடுத்த பாண்டூர் அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 10 பெண்கள் காயம் அடைந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.