திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-05-27 12:34:00



திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மே 27 : திருவள்ளூர் பஜார் வீதியில் விலையேற்றம், வேலையின்மைக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொகுதி செயலாளர் இரா.வே.யோகா தலைமை தாங்கினார்.நகர செயலாளர் டி.லோகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் டி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் குழு மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மற்றும் பொருள்களை மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வுகளை மொத்தமாக திரும்ப பெற வேண்டும். பருப்பு, எண்ணைய் உள்ளிட்ட அனைத்து அத்தியவாசியப் பொருள்களையும் நியாய விலைக்கடைகளில் வழங்கவும், ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்,வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்,நகர்ப்புற வேலை உறுதி சட்டம் கொண்டு வர வேண்டும்,அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தளபதி சுந்தர்,மாவட்ட செயலாளர் கே.கஜேந்தரன் உட்பட விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.