திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் : மாவட்ட துணை தேர்தல் அலுவலர் ஆ.இராஜ்குமார் வெளியிட்டார் :

பதிவு:2024-09-02 12:28:08



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் : மாவட்ட துணை தேர்தல் அலுவலர் ஆ.இராஜ்குமார் வெளியிட்டார் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் : மாவட்ட துணை தேர்தல் அலுவலர் ஆ.இராஜ்குமார் வெளியிட்டார் :

திருவள்ளூர் ஆக 31 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட துணை தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான ஆ.இராஜ்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டு பேசினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமை தேர்தல் அதிகாரி,அரசு முதன்மை செயலர் அவர்களின் அறிவுரைப்படியும், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3665 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், மத்திய சென்னை, சென்னை மாவட்டம், மண்டல அலுவலர்கள், மண்டலம் - 1 மற்றும் மண்டலம் - 7 ஆகிய அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.

எனவே, அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தங்களது எழுத்துபூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களுக்கு இவ்வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியிட்ட 7 தினங்களுக்குள் (04.09.2024) அளிக்குமாறு என மாவட்ட துணை தேர்தல் அலுவலர் ஆ.இராஜ்குமார் தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)சத்திய பிரசாத், வட்டாட்சியர் ( தேர்தல்) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.