திருவள்ளூரில் ஜவுளித்தொழில் முனைவோர்களுடன் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம் :

பதிவு:2024-09-02 12:30:35



திருவள்ளூரில் ஜவுளித்தொழில் முனைவோர்களுடன் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம் :

திருவள்ளூரில் ஜவுளித்தொழில் முனைவோர்களுடன் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம் :

திருவள்ளூர் ஆக 31 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜவுளித்தொழில் முனைவோர்களுடன் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப்பூங்கா குறைந்த பட்சம் 3 தொழிற் கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவின் (Mini Textile Park) அமைப்பு பின்வரும் உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

நிலம்,உட்கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்றுசுவர். கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவைகள்). ஆய்வுக் கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம். உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதரஇனங்கள்.

உற்பத்தி தொடர்பான தொழிற் கூடங்கள்.இயந்திரங்கள் மற்றும் தள வாடங்கள்.எனவே, இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத்தகுதியான முதலீடாகக் கருதப்படும்.மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு மண்டலதுணை இயக்குநர், துணி நூல்துறை, சேலம் அலுவலகத்தை அணுகி, கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதில் துணிநூல்துறை, சேலம், மண்டல துணை இயக்குநர் எஸ்.அம்சவேணி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சேகர், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர், அருண்குமார், திருவள்ளூர் மற்றும் ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.