பதிவு:2024-09-02 12:38:27
திருவள்ளூர் மாவட்ட டி.யூ.ஜே மற்றும் தீபம் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் : மாநிலத்தலைவர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் செப் 02 : திருவள்ளூர் மாவட்ட டி.யூ.ஜே மற்றும் தீபம் கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இம்முகாமை டி.யூ.ஜே. மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் வருவாய் துறை அலுவலர் சங்க கூட்டரங்கில் நடைப்பெற்ற இந்த நிகழ்சிக்கு கௌரவ தலைவர் தேவராஜன், மாவட்டச் செயலாளர் யுவராஜ், துணைத்தலைவர்கள் வி.பாஸ்கர், ஜி.ரமேஷ், எஸ்.சீனிவாசன் மற்றும் இணைச்செயலாளர்கள் எஸ்.சுரேந்தர், எஸ்.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. கருணாநிதி வரவேற்றார்.மாவட்ட பொதுச் செயலாளர் பெ.ரூபன் துவக்க உரை ஆற்றினார்.
இலவச கண் சிகிச்சை முகாமினை மாநிலத்தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன், பொதுச் செயலாளர் கே.முத்து, மாநில இணைச்செயலாளர் ஆர்.முருகக் கனி, தீபம் மருத்துவமனை ஆப்பரேஷன்ஸ் மேலாளர் ஒமேகா கோபிநாத் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.இந்தநிகழ்வில் சங்க உறுப்பினர்களுக்கு, இரண்டாம் கட்டமாக உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த டி.யூ.ஜே. உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தீபம் மருத்துவமனையில் 50 சதவீதம் சலுகை அடிப்படையில் கண் சிகிச¢சை பெற, அடையாள அட்டையினை, தீபம் கண் மருத்துவமனை ஆப்பரேஷன்ஸ் மேலாளர் ஓமேகா கோபிநாத், டி.யூ.ஜே. மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் உடல்நல குறைவு காரணமாக மறைந்த மூத்த பத்திரிகையாளர் முகமது கவுஸ் குடும்பத்திற்கு, திருவள்ளூர் மாவட்ட டி.யூ.ஜே. சார்பில் ரூபாய் 50 ஆயிரம் நிதி உதவியினை அவரது குடும்பத்தார் வசம் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் முகமதுகவுஸ் குழந்தைகளின் கல்வி செலவுகளை இந்த கல்வி ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என அறிவித்த நிறுவன இயக்குநர் ஸ்டீபன் இந்த ஆண்டிற்கானரூ.10 ஆயிரத்திறகான காசோலையை, மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமனிடம் வழங்கினார்.
மேலும் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று செயல்பட முடியாமல் ஓய்வில் இருக்கும் சங்க உறுப்பினர் செய்தியாளர் முருகன் குடும்பத்தாருக்கு டி.யூ.ஜே. திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில், ரூபாய் 4,500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கே.வெங்கடேஷ்வரலு நன்றி கூறினார். முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு ஏற்பாடுகளை டி.யூ.ஜே. திருவள்ளூர் மாவட்ட மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதில் திருவள்ளூர் மாவட்ட நிருபர்கள் திருத்தணி பாஸ்கர்,யோகானந்தம், அசோக்,சந்திரசேகர்,அண்ணாதுரை,சீனிவாசன்,நாகராஜன்,தீனதயாளன்,அறிவாயுதம் நாளிதழ் இரா.பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.