திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது கலைஞர் விருது அறிவிப்பு : தலைவருக்கும் திருவள்ளூர் மண்ணுக்கும் நன்றி தெரிவித்த எம்பி ஜெகத்ரட்சகன் :

பதிவு:2024-09-02 12:40:40



திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது கலைஞர் விருது அறிவிப்பு : தலைவருக்கும் திருவள்ளூர் மண்ணுக்கும் நன்றி தெரிவித்த எம்பி ஜெகத்ரட்சகன் :

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது கலைஞர் விருது அறிவிப்பு : தலைவருக்கும் திருவள்ளூர் மண்ணுக்கும் நன்றி தெரிவித்த எம்பி ஜெகத்ரட்சகன் :

திருவள்ளூர் செப் 02 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கே. திராவிட பக்தன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ வரவேற்றார்.தலைமைச் செயற்குழு உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் திருத்தணி எம். பூபதி, ஆர்டிஇ ஆதிசேஷன், ஓ.எ.நாகலிங்கம், இ.குருதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது திமுக சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகனுக்கு திமுக சார்பில் கலைஞர் விருது அறிவிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததை திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் தெரிவித்ததால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன் எம்பி, திருவள்ளூர் மாவட்டம் எனது சொந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் நான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது கலைஞர் விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது அறிவித்த முதல்வருக்கு நன்றி. இந்த மண்ணுக்கும் இங்குள்ள மக்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.

தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது போல வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற அனைவரும் அதிகம் பாடுபட வேண்டும் என அப்போது உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தலைமை அறிவுறுத்தலின் பேரில் ஒன்றிய நகர பேரூர் பகுதிகளில் திமுக கொடி அதிக அளவில் ஏற்றப்பட வேண்டும். இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் வி. சி.ஆர். குமரன், சி.ஜெயபாரதி, எம்.மிதுன் சக்கரவர்த்தி, ப. சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம் வி.கிஷோர், மு. சுப்பிரமணியம், ராஜேஸ்வரி ரவீந்திரநாத் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் எஸ். மகாலிங்கம், கூளுர் எம்.ராஜேந்திரன், க. ஹரிகிருஷ்ணன், மோ.ரமேஷ், டி.கிறிஸ்டி(எ) அன்பரசு, பா. ஆர்த்தி ரவி, ஜி. ரவீந்திரா, சி.என். சண்முகம், சி.ஜே. சீனிவாசன் , மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ம.கிரண், முரளி சேனா, சரஸ்வதி சந்திரசேகர், எம். பன்னீர்செல்வம், வி.எஸ். நேதாஜி, சி.சு.விஜயகுமார், ஜி. கோவிந்தம்மாள், ஜி. வேலாயுதம், ஜி. ஜெய் கிருஷ்ணா, கே. மதுசூதனன், ப.கோபால், பி.கே.நாகராஜ், பூண்டி எம்.எஸ். அருண்குமார்,ஜி.சித்திக் அலி, எஸ்.குமரன், இ.கே. உதயசூரியன், மத்தூர் எஸ். பன்னீர்செல்வம், எஸ். ஜெகஜீவன் ராம், பி.எல். ஆனந்தன், என். நந்தகோபால், எம்.சீனிவாசன்,சிலம்பு பன்னீர்செல்வம், ஏ.சாம் ஜெபராஜ் திருவள்ளூர் நகர நிர்வாகிகள் தி.ஆ.கமலக்கண்ணன், டி.எம். ரவி, ராஜேஸ்வரி கைலாசம், எம்,பரசுராமன், எஸ்.டி.பி.சம்பத் ராஜா, இ. குப்பன், டி.என்.ஆர். சீனிவாசன், டி. சிவகுமார் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் தா.மோதிலால், டி.எம்.சுகுமார், டி.கே.பாபு, மா.புவனேஷ் குமார், ஆணழகன் டி.ஆர்.திலீபன் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் திருவள்ளூர் நகர செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான சி.சு ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.