பதிவு:2024-09-03 11:36:02
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 425 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் செப் 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 425 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 144 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 87 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 43 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 65 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 86 மனுக்களும் என மொத்தம் 425 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.5,28,600 மதிப்பீட்டில் நவீன செயற்கை அவையங்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டம் பூவலம்பேடு போஸ்ட்டு கிராமத்தை சேர்ந்த அஞ்சலை தையல் இயந்திரம் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்கள் மனு வழங்கிய சில நிமிடங்களிலேயே அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.6,690 மதிப்பிலான தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வை.ஜெயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த்,உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா,தனித் துணை ஆட்சியர் (சபாதி) வி.கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி) மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு சார்ந்த உயர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.