திருவள்ளூர் அருகே புறநகர் மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

பதிவு:2022-05-27 12:37:28

திருவள்ளூர் அருகே புறநகர் மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

திருவள்ளூர் அருகே புறநகர் மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

திருவள்ளூர் மே 27 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த ஒரத்தூர் பகுதியை சேர்ந்த நீதிதேவன் (19) சென்னை மாநில கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடி சென்ற போது வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும், செவ்வாப்பேட்டை நிலையத்திற்கும் இடையில் தவறி விழுந்துள்ளான்.

இதில் படுகாயம் அடைந்த மாணவனை ரயில்வே போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். இரண்டு கால்களும் துண்டான நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் நீதிதேவன் உயிரிழந்தார். மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்