பதிவு:2024-09-03 11:38:38
திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் செப் 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலை வகித்தார்.
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற 7 9 2021 அன்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவது முன்னிட்டு சட்டமன்ற ஒழுங்கு தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும், விநாயகர் சிலைகள் நிறுவுதல் வழிபடுதல் மற்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் குறிக்கும் அரசாணை மற்றும் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக கள்ளச்சாராயம் , கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது,
இதில் வட்ட வருவாய் அலுவலர் ஆ. இராஜ்குமார், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வை.ஜெயகுமார் பொன்னேரி சார் ஆட்சியர் வாஹே சங்கத் பல்வந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்) தீபா (திருத்தணி) உதவி ஆணையர் (கலால்) ரங்கராஜன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.