திருவள்ளூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சார்பில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் மற்றும் கருத்தரங்கம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :

பதிவு:2024-09-04 11:40:12



திருவள்ளூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சார்பில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் மற்றும் கருத்தரங்கம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சார்பில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் மற்றும் கருத்தரங்கம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் செப் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சார்பில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்து மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு கருத்துரை வழங்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் புதிய தொழில்கள் தொடங்குதல், மேம்படுத்துதல் குறித்த சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த தொழில் முதலீட்டு கழக நிறுவனம் இரு இலக்குகளை நோக்கி செயலாற்றி வருகிறது.

தொழில் துறையில் தமிழகம் முன்னேற்றம் அடையவும், புதிய தொழில் முனைவோர் கொண்டு புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க ஊக்குவிப்பதும்,தொழில் துறையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்க 2030-க்குள் தொழில் முதலீடுகளை அதிகரிப்பதே அந்த இரு நோக்கங்களாகும். கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு ரூ.2,750 கோடி வருவாய் கிடைத்தது. நிகழாண்டில் ரூ.3,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அண்ணல் அம்பேத்கர் முன்னோடி திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர்கள், பழங்குடியினர்களுக்கு புதிய தொழில் முனைவர்களாக உருவாக்குவதற்கும் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. நீட்ஸ் திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு தொழில் முனைவோர்களே உருவாக்குவதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஆகவே திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கி தொழில் முனைவோர்களாக உருவாகி வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கி பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்தார்.

தொடா்ந்து, பல்வேறு தொழில் முனைவோர்களிடமிருந்து ரூ.21.95 கோடிக்கான தொழில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றார் இதில், ரூ.6.37 கோடிக்கான கடன் உதவி ஆணைகள், ரூ.3.72 கோடியில் காசோலைகள் என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.10.09 கோடியில் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சென்னை முதன்மை மண்டல மேலாளர் பழனிவேல் திருவள்ளூர் கிளை மேலாளர் அசோக், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் சேகர், துணைப் பொது மேலாளர் (திட்டம்) சித்ரா செண்பகவல்லி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தொழில் முனைவோர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.