திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-09-05 10:40:38



திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் செப் 05 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர், மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நெல் அறுவடை இயந்திரங்களை இம்மாவட்டத்திற்கென கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியதோடு, தற்காலிக தீர்வாக பிற மாவட்டங்களிலிருந்து தேவையான நெல் அறுவடை இயந்திரங்களை இம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுமாறு குறைந்த வாடகைக்கு அளித்திட அறிவுறுத்தினார்.

இதனடிப்படையில், அறுவடைக் காலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவளித்திடும் வகையிலும், நெல் பயிர்களை சரியான நேரத்திலும் மற்றும் முறையாக அறுவடை செய்திடவும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் இம் மாவட்டதிற்கென மூன்று நெல் அறுவடை செய்யும் இயந்திரங்கள் பிற மாவட்டங்களிலிந்து இம் மாவட்டத்திற்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் (வே.பொ.) அவர்களால் தற்காலிகாமாக மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து இந்நெல் அறுவடை இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நெல் அறுவடை இயந்திரமானது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வாடகை அடிப்படையில் மணிக்கு ரூ.1880/- என்ற வீதத்தில் ஒரு விவசாயிக்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கும் அதிகபட்சமாக 20 மணி நேரத்திற்கும் வாடகைக்கு பெற்று பயனடையலாம்.

இப்பொருள் குறித்து மேலும் தகவலறிய விரும்பும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் திருவள்ளூர். பெரியகுப்பம், என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகத்தினையும், மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்டங்களான திருவள்ளூரில், பெரியகுப்பம், என்.ஜி.ஜி.ஓ. காலனியில்உள்ளஉதவிசெயற்பொறியாளர் (வே.பொ.)அலுவலகத்தினையும், திருத்தணியில் எண் 27, பல்லவன் கிராம வங்கி அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ.)அலுவலகத்தினையும், பொன்னேரியில்,எண் 20 சக்திநகர், மார்டன் பள்ளி அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகத்தினையும் நேரில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.