இரண்டாவது முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் அமைப்பதற்கான சங்க உறுப்பினர்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

பதிவு:2024-09-05 10:42:06



இரண்டாவது முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் அமைப்பதற்கான சங்க உறுப்பினர்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

இரண்டாவது முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் அமைப்பதற்கான சங்க உறுப்பினர்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

திருவள்ளூர் செப் 05 : முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட வழி வகை செய்யும் பொருட்டு, கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கவும், சிறு தொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்ததும் நோக்கில் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்நேர்வில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக முஸ்லீம் மகளிர் உதவும சங்கம் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது.

மேற்படி முஸ்லீம் மகளிர் உதவும சங்கத்தினை நல்ல முறையில செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராகவும், மகளிர் திட்ட அலுவலரை துணைத் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையியனர் நல அலுவலரை பொருளாளராகவும் கொண்ட குழு அரசின் வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி, “முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் – 2” - னை சிறப்பான முறையில் செயல்படுத்த இக் குழுவில், அலுவல்சாரா உறுப்பினர்களாக ஒரு கௌரவச் செயலாளர், இரண்டு கௌரவ இணைச்செயலாளர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு நல்ல திறன் மிக்க சமூகத் தொண்டாற்றுவதில் ஆர்வமுள்ள முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சமூகப் பணிகளில் எந்த வித புகார்களுக்கும் இடமின்றி மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையோ, நீதிமன்ற வழக்குகளோ நிலுவையில் இருத்தல் கூடாது.

இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக தேர்வு செய்யப்படுவர். இந்த தகுதிகளுடைய நபர்கள் தங்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி, குடும்ப விவரம் மற்றும் ஏற்கனவே மேற்கொண்ட சமூக தொண்டுகள் ஆகிய சுய விவரங்களுடன் 13.09.2024 ஆம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.