பதிவு:2024-09-05 10:45:51
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது :
திருவள்ளூர் செப் 05 : திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய விரிவுரையாளர் 1, தலைமை ஆசிரியர்கள் 6, தனியார் பள்ளி முதல்வர் 1, பட்டதாரி ஆசிரியர்கள் 4, இடைநிலை ஆசிரியர் 1 என மொத்தம் 13 பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் செப்.5 இல் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அன்றைய நாளில் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றுவோர் தேர்வு செய்யப்பட்டு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 13 பேருக்கு நல்லாசிரியர் விருதுக்கு நிகழாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், திருவூரில் செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய முதுநிலை விரிவுரையாளர் ஏ.ஜெகதீஸ்வரி, திருவூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.மலர்கொடி, வேலப்பன்சாவடி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்}சி.வரலட்சுமி, ஆரிக்கம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ஜெயராமன், ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இ.காவேரி, பள்ளிப்பட்டு அருகே கேசவராஜகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்}ப.ஸ்டேன்லி சுகுமார், பூண்டி அருகே சென்றாயன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சு.முரளி, ஆவடி மாநகராட்சி கோவர்த்தனகிரி நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கே.சரஸ்வதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்துமதி, வில்லிவாக்கம் புதிய கன்னியம்மன்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ந.திருமால், பூந்தமல்லி வயலாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜோ.சிங்கராஜ், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் ஏ.வி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜோஸ்பின் ஜெயந்தி, திருவள்ளூர் மாவட்ட அரசு அலுவலர் குடியிருப்பு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.சண்முகபிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான விழா செங்கல்பட்டு அருகே வண்டலூர் பிரசிடென்சி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்கள்.