விநாயகர் சதுர்த்தி திருவிழா

பதிவு:2024-09-08 18:26:46



விநாயகர் சதுர்த்தி திருவிழா

விநாயகர் சதுர்த்தி திருவிழா

திருவள்ளூர் செப்டம்பர் 08 - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் அழகிய வண்ண சிலைகளை கொண்டு விநாயகரை வழிபட்டு வந்தனர்.

அந்த வகையில் திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திரையரங்கம் எதிரி கண்ணையா நகர் சார்பாக நாவலர் தெரு முகத்தில் 31 ஆம் ஆண்டாக ஸ்ரீ விஜய விநாயகர் சிலை அமைத்து வழிபட்டனர்.

அதேபோன்று கொசவன் பாளையம் கிராமத்தில் மெக்கானிக் சுரேஷ் ஏற்பாட்டில் பிரம்மாண்டமான விநாயகர் சிலையை அமைக்கப்பட்டு விநாயகர்களுக்கு பிடித்தமான அப்பம் முறுக்கு மற்றும் பல விதமான பலகாரங்களை படைத்து மலர் அலங்காரம் செய்து வழிபட்டனர்.

பின்பு விநாயகர் சிலையை மேளதாளம் முழங்க வான வெடி வெடிக்க வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்று வீடு வீடாக ஊர் மக்கள் அனைவரும் தீபா ஆராதனை செய்து பக்தியுடன் வழிபட்டு வணங்கினர்.