திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் :

பதிவு:2024-09-09 11:04:03



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் :

திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் 2030–க்குள் தமிழகத்தை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவது தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பார்வையாகும். (தொழிலாளர் நலன் மற்றும் திறன் துறை, கொள்கை குறிப்பு 2023-24), மேலும், பல்வேறு தொழில்களில் (ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா) கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதற்கான தொடர்ச்சியான காலமுறை ஆய்வுகள் மேற்கொள்வது குறித்தும் மாவட்ட எல்லைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் வருவதை முறையாக கண்காணித்து அவர்கள் கொத்தடிமை தொழிலாளர்களாக உருவாவதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், திருவள்ளூர் மாவட்டத்தில் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு முழுமையான மறுவாழ்வு நடவடிக்கை எடுத்தல் குறித்தும், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை “விடியல் திட்டத்தில் “ சேர்த்து, அவர்கள் மீட்கப்படும் போது, மறுவாழ்வு செயல்முறையை பயனுள்ளதாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல், கொத்தடிமைத் தொழிலை “கொடிய குற்றம்” என்று பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணர்த்தும் வகையிலும், IEC தகவல், கல்வி மற்றும் தொடர்பு மூலம் கொத்தடிமைத் தொழிலாளர் குறித்த ஏற்கெனவே உள்ள விழிப்புணர்வு முயற்சிகளை உயர்த்தவும், விழிப்புணர்வு மேடைகள், சுவரொட்டிகளை பொது இடங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுத்தல் குறித்தும், கிராமம், தாலுக்கா மற்றும் மாவட்ட அளவில் – பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரிடையே (SC, ST, MBC மற்றும் BC) சமூக மயமாக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் உதவி எண். 155214. சிறப்பு ஒழுங்குமுறை இயக்கங்கள் பிப்ரவரி 9 –ம் தேதி (கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்) மற்றும் உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் மற்றும் சர்வதேச மகளிர் தினம் போன்ற பிற சிறப்பு நாட்களில் இது தொடர்பான சிறப்பு கூட்டங்கள் மற்றும் உறுதிமொழி ஏற்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் குறித்தும், மாதம் ஒரு முறை மாதாந்திர கண்காணிப்பு குழுவின் கூட்டம் நடைபெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முன்னதாக கட்டுமான தொழிலாளி நவீன் குமார் அவர்கள் மதுரவயல் வட்டம், பாக்கியலட்சுமி நகர், பிள்ளையார் கோவில் தெரு என்ற முகவரியில் 25.11.2018 அன்று பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பதிவு பெறாத தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் அன்னாரது தாயார் சாந்தாவிடம் வழங்கினார்கள்

இந்நிகழ்வில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அமலாக்கம்) ஷோபனா, தனபாலன் (சபாதி) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.ரவிசந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரணி, தன்னார்வலர் ஸ்டீபன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.