திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பாக கரும்பு கடத்தலை தடுப்பது குறித்து கண்காணிப்புக் குழு கூட்டம் :

பதிவு:2024-09-09 11:09:50



திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பாக கரும்பு கடத்தலை தடுப்பது குறித்து கண்காணிப்புக் குழு கூட்டம் :

திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பாக கரும்பு கடத்தலை தடுப்பது குறித்து கண்காணிப்புக் குழு கூட்டம் :

திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பாக கரும்பு கடத்தலை தடுப்பது குறித்து கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள்,ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர்கள் மகேஷ்வரன் (தலைமையிடம்) வி.அன்பு,போக்குவரத்து) மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கரும்புக்கடத்தலை தடுக்கும் பொருட்டு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட விவகார எல்லையான திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள சில தனியார் சர்க்கரை ஆலைகளும், ஆந்திராவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளும், இடைத்தரகர்கள் மூலம் கரும்புக் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள் இச்செயல் சர்க்கரைத்துறை ஆணையரின் செயல்முறை ஆணையின்படியும், கரும்பு கட்டுப்பாட்டு ஆணைப்படியும், ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பதிவு மற்றும் பதிவில்லா கரும்பை இதர ஆலைக்கு எடுத்துச் செல்வதை கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 6(1)யீ-ன் படியும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 பிரிவு 3கி-ன் படியும், தமிழ்நாடு சர்க்கரை ஆலைகளுக்கான விதிகள் மற்றும் சட்டம் 1949-ன் படியும் தடைசெய்யப்படுகிறது என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கரும்புகள் எடுப்பதை தனியார் சர்க்கரை ஆலைகள் நிறுத்திக் கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் வருவாய் வசூல் செய்யும் பிரிவின்கீழ் கரும்பு கடத்தலில் ஈடுபடும் லாரி மற்றும் டிராக்டர்களை பறிமுதல் செய்வதுடன் இடைதரகர்கள் மீது காவல்துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கரும்பு கடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கரும்பு கடத்தலில் ஈடுபடும் தனியார் சர்க்கரை ஆலைகள் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கரும்பு கடத்தலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் விவசாய பெருமக்கள் தனியார் ஆலையையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி கரும்பு அறுவடை செய்து அனுப்பும்போது சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லைக்குட்பட்ட பகுதியில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாய பெருமக்கள் தங்களின் கரும்புகளை தனியார் ஆலைக்கு அனுப்பாமல் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கே அனுப்பப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

இதில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் மலர்விழி, பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் , வருவாய் கோட்டாட்சியர்கள் ரங்கராஜன் (பொ) (திருவள்ளூர்), தீபா (திருத்தணி), மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) செல்வம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் சார்பாக ஸ்ரீநாத் மற்றும் நேதாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.