பதிவு:2024-09-09 11:12:13
திருவள்ளூரில் சிற்றுந்து (மினி பேருந்து) வழித்தடம் அமைப்பது தொடர்பாக சிற்றுந்து உரிமையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் :
திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிற்றுந்து (மினி பேருந்து) வழித்தடம் அமைப்பது தொடர்பாக சிற்றுந்து உரிமையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களில் நலன் கருதி சிற்றுந்து வழித்தடம் அமைப்பது தொடர்பாக உரிமையாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர்,பூவிருந்தவல்லி மற்றும் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு இடங்களை தேர்வு செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் 50 சிற்றுந்து வழித்தடம் அமைப்பதற்கு சர்வே மேற்கொள்ள வேண்டும். ஆகவே போக்குவரத்து அலுவலர்கள் உடனடியாக 50 சிற்றுந்து வழித்தடங்களை சர்வே கண்டு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பரணி, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் (பொ) மாதவன் (திருவள்ளூர்), ஸ்ரீதரன் (பூவிருந்தவல்லி), திரு. இளமுருகன் (செங்குன்றம்) , மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) செல்வம், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.