பதிவு:2024-09-09 11:13:49
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பொருட்கள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது :
திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விக்னேஸ்வரா நகர் பகுதியில் வசித்து வருபவர் தனராம் மகன் சதாராராம். (35). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் புகையிலைப் பொருட்களை கடத்தி சென்று விற்பனை செய்வது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 2017 முதல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்€ற போதைப் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்த குற்றத்திற்காக திருவள்ளூர் டவுன் காவல் நிலையம், தாலுக்கா காவல் நிைலயம், நாட்ராம்பள்ளி காவல் நிலைய போலீசாரார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசு குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதனையடுத்து சதாராராம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப் பெருளாள் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் சதாராராமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.