திருவள்ளூரில் பட்டியலின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தடுத்து நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-05-28 17:08:19

திருவள்ளூர் மே 27 : திருவள்ளூர் பஜார் வீதியில் பட்டியலின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தடுத்து நிறுத்தவும்,மாவட்டத்தில் நிலவும் சாதியப் பாகுபாடு,தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எழிலரசன் தலைமை தாங்கினார்.இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், ரஜினி, அந்தோணி, எல்லையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ராஜா நகரம் நகரம் ஊராட்சியில் வசித்து வரும் 107 பட்டியலின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, குடியிருக்கும் இடத்திலேயே ஒதுக்கப்பட்டது, 27 ஆண்டுகளாக வீடுகள் கட்டி குடியேற முடியவில்லை, இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை,

கும்மிடிப்பூண்டி அருகே தோக்கமூர் ஊராட்சியில் பட்டியலின மக்கள் வீட்டைச்சுற்றி எழுப்பிய சுற்றுச் சுவரை அகற்றி,92 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மனைப்பட்டா வழங்க வேண்டும். விஷ்ணு வாக்கம் கிராமத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க முடியாத நிலையில் உள்ளது.

அங்கு அரசு தீர்மானித்த இடத்திலேயே நிழற்குடை கட்ட வேண்டும். அந்த கிராமத்தில் சாலையோரம் ஆக்கிரமித்த 28 சென்ட் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, அந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.