பதிவு:2024-09-10 10:25:22
திருவள்ளூரில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வை முன்னிட்டு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் :
திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு எதிர்வரும் 14.09.2024 அன்று முற்பகல் 71 தேர்வு மையங்களில் 21,440 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
5 நிலைய கண்காணிப்பு குழு மற்றும் 5 பறக்கும் படை குழுவினர்கள் துணை ஆட்சியர் அளவில் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். 20 இயக்குக்குழுக்கள் 76 வீடியோ கிராப்பர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை தொடர் கண்காணிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டு உள்ளனர், தேர்வு நடைபெறுவதற்கான தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, பேருந்து வசதி, கழிப்பறை வசதி போன்ற அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுவதற்கான அனைத்து ஏற்பாட்டுப்பணிகளும் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கர் பல்வந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.