திருவள்ளூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக 25 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

பதிவு:2024-09-10 10:28:08



திருவள்ளூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக 25 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

திருவள்ளூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக 25 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் : மாவட்ட ஆட்சியர்  த.பிரபுசங்கர் வழங்கினார் :

திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு 25 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கி பேசினார்.

திருவள்ளுர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு இன்று 25 கர்ப்பிணிகளுக்கு வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பச்சைபயிறு, வெல்லம், சிவப்பு அவல், கொண்டைகடலை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் வீட்டு தோட்டத்தில் கட்டாயம் வளர்க்க வேண்டிய செடி முருங்கை செடிகள் வழங்கப்பட்டது. இதனை நீங்கள் தவறாமல் சாப்பிட வேண்டும். இதை தவிர சத்தான ஊட்டச்சத்து அளவினை இப்பொழுது சாப்பிடுவதை இருமடங்கு சாப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பாக, முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலை தவிர வேறு ஏதும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. கண்டிப்பாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்கான அனைத்து சிறப்பு வசதிகளும் உள்ளது. எனவே, அனைவரும் ஆரோக்கியமான குழந்தையை பெற வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். மேலும், ஆலோசனை நிகழ்ச்சியில் குழந்தையின் முதல் ஆயிரம் நாட்கள் (1000 நாட்கள்) குறித்தும், தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றியும், தவிர்க்க வேண்டிய உணவு பொருட்களை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா,மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.