பதிவு:2024-09-10 10:29:56
திருவள்ளூரில் அதிமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பி வி ரமணா அடையாள அட்டை வழங்கி வரவேற்றார் :
திருவள்ளூர் செப் 09 : தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து பொதுமக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் நல திட்ட உதவிகளையும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்திய காரணத்தால் தற்போது அதிமுகவில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர். அதன்படி திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் நகரில் அதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் எஸ்.ஏ.நேசன், கே.பி.எம். எழிலரசன் , நகர மன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கி பேசினார்.
அப்போது திமுக ஆட்சியின்மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே விடியா திமுக ஆட்சியின் கையாலாகாத தனத்தையும், கடந்த அதிமுக ஆட்சியில் சாதனைகளையும் பொதுமக்களிடம் எடுத்து சொல்லி அதிமுக அமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என அப்போது முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா கேட்டுக்கொண்டார். இதில் வார்டு செயலாளர்கள் செல்வம், ராதாகிருஷ்ணன் மற்றும் சீனிவாசன் , எத்திராஜ், கார்த்தி ஆன்ந்த், மஞ்சுளா, குட்டியம்மா, கலைவாணி, மஞ்சு, பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.