பதிவு:2024-09-10 10:38:43
திருவள்ளூர் அருகே சிங்கிள் (1) பேஸில் இருந்து த்ரீ (3) பேஸ் மின் இணைப்பு வழங்க ரூ. 2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா் :
திருவள்ளூர் செப் 10 : திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியை சோ்ந்தவர் மதுக்கர் (49). இவா் மணவாளநகர் அடுத்த போளிவாக்கம்பகுதியில் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில், கார் சர்வீஸ் சென்டருக்கு மின் இணைப்பு சிங்கிள் பேஸ் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் த்ரீ பேஸ் மின்சாரம் இணைப்பு பெறுவதற்காக பெரிய குப்பத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.
இதுதொடா்பாக பெரியகுப்பம் மின் வாரிய உதவி பொறியாளா் கஜேந்திரனை (52) சந்தித்து விசாரித்தபோது, த்ரீ பேஸ் இணைப்பு வழங்க மதுக்கரிடம் ரூ.2,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுக்கர் திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் செய்தாா். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரமூா்த்தி, இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2500-ஐ மதுக்கரிடம் இருந்து உதவி பொறியாளர் கஜேந்திரன் பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கஜேந்திரனை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.
இச்சம்பவம் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுபோன்ற மின்வாரிய அலுவலகங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவோர் குறித்து புகார் அளிக்கும் எண்ணை மிகப் பெரிய அளவில் அச்சடித்து பொதுமக்கள் கண்ணில் படும்படி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.