திருவள்ளூர் நகராட்சி ஆணையராக ஜி.ராஜலட்சுமி பொறுப்பேற்றார்

பதிவு:2022-05-28 17:10:15

திருவள்ளூர் நகராட்சி ஆணையராக ஜி.ராஜலட்சுமி பொறுப்பேற்றார்

திருவள்ளூர் நகராட்சி ஆணையராக ஜி.ராஜலட்சுமி பொறுப்பேற்றார்

திருவள்ளூர் மே 28 : திருவள்ளூர் நகராட்சி ஆணையராக பணியாற்றிய சி.வி. ரவிச்சந்திரன், தேர்தல் நேரத்தில் மருத்துவ விடுப்பில் சென்றார்.அதனைத் தொடர்ந்து அவர், சங்கரன்கோவில் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் செங்கல்பட்டு ஊராட்சியில் பணிபுரிந்து வந்த ராஜலட்சுமி, திருவள்ளூர் நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

அதனையடுத்து திருவள்ளூர் நகராட்சி ஆணையராக ஜி.ராஜலட்சுமி பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு அதிகாரிகள் நகராட்சித் தலைவர் உதயகுமார் பாண்டியன், வார்டு கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.