திருவள்ளூரில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் :

பதிவு:2024-09-11 14:38:16



திருவள்ளூரில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் :

திருவள்ளூரில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் செப் 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூர்), ச.சந்திரன் (திருத்தணி) ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை திருவள்ளூர் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 10.09.2024 முதல் 24.09.2024 வரை மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டரங்கம், நசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆவடி, யூனிக் அகாடமி, திருவள்ளூர், AK Sports Club, அரண்வாயல், த.சி.கா.5ம்அணி, வைஷ்ணவி நகர், ஆவடி (முருகப்பா பாலி டெக்னிக் அருகில்) மற்றும் ICF Higher Secondary School, ICF,Chennai-38 ஆகிய விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு தடகளம்,நீச்சல், மேசைப்பந்து மற்றும் கேரம், இறகுப்பந்து, கிரிக்கெட், சிலம்பம், கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கால்பந்து, கபாடி,கோகோ, செஸ், வளைகோல்பந்து, கைப்பந்து, ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.

கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்கு இறகுப்பந்து. மேசைப்பந்து மற்றும் கேரம். கிரிக்கெட். சிலம்பம். கூடைப்பந்து கால்பந்து. தடகளம். வளைகோல்பந்து. கையுந்துப்பந்து கபாடி ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது மாற்றுத்திறனாளி பிரிவுகளில் தடகளம், இறகுப்பந்து, WHEEL CHAIR, TABLE TENNISஎறிப்பந்து, கபடி , மற்றும் கையுந்துப்பந்து ஆகிய போட்டிகள் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு மட்டும் 21.09.2024 நடைபெறவுள்ளது.அரசு ஊழியர் பிரிவுகளில் கேரம், இறகுப்பந்து. செஸ். கையுந்துப்பந்து மற்றும் தடகளம் நடைபெறவுள்ளது.

பொது பிரிவினர்களில் இறகுப்பந்து. கேரம். கிரிக்கெட். தடகளம். கால்பந்து, கபாடி மற்றும் கையுந்துப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது இப்போட்டிகளில் முதல்பரிசு பெற்றவர்களுக்கு ரூ.3000, இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.2000 ம், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.1000 ம் வழங்கப்படும். தனிநபர் பிரிகளில் முதல்பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். மேலும், குழுப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து மாநில அளவில் நடைபெறும் குழுப்போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

இதில் திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர்பாண்டியன்,திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன் (பொ) , மாவட்ட விளையாட்டு மற்றும் இளைநர் நலன் அலுவலர் சேதுராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, உடற்கல்விபயிற்றுநர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவ/மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.