கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளில் அதிமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா வழங்கினார் :

பதிவு:2024-09-11 14:30:06



கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளில் அதிமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா வழங்கினார் :

கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளில் அதிமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா வழங்கினார் :

திருவள்ளூர் செப் 11 : தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து பொதுமக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் நல திட்ட உதவிகளையும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்திய காரணத்தால் தற்போது அதிமுகவில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட கொப்பூர், பாப்பரம்பாக்கம், வெங்கத்தூர், போளிவாக்கம், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில்அதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா சுதாகர், ஞானகுமார், தட்சிணாமூர்த்தி, சிற்றம் சீனிவாசன், விஜயகாந்த், பூபாலன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி பேசினார்.

அப்போது விடியா திமுக ஆட்சியின்மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய மக்கள் விரும்புகின்றனர். எனவே விடியா திமுக ஆட்சியின் கையாலாகாத தனத்தையும், கடந்த அதிமுக ஆட்சியின சாதனைகளையும் பொதுமக்களிடம் எடுத்து சொல்லி அதிமுக அமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் அதிக அளவில் இளைஞர்கள் பெண்கள் ஆர்வமுடன் அதிமுகவில் இணைந்து வருவதாக அப்போது முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பேசும்போது தெரிவித்தார். இதில் செந்தில்குமார், பாலாஜி, மில்டன், உமாபதி, சுரேஷ்குமார், கொப்பூர் சத்தியமூர்த்தி, போளிவாக்கம் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.