திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் :

பதிவு:2024-09-11 14:33:05



திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் :

திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் :

திருவள்ளூர் செப் 11 : திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராஜாஜி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட கூடுதல் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினார்.தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முரளி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் பிரசன்னா முன்னிலை வகித்தனர். இதில் டிடோஜாக்கின் மாநில உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் மாநில பார்வையாளராக பங்கேற்று கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொருளாளர் ருக்மாங்கநாதன் சிறப்புரையாற்றினார்.

அப்போது, அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்பதை அரசு கொள்கை முடிவாக அறிவித்தல் உள்பட 32 கோரிக்கைகளை கோரிக்கைளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தில் டிட்டோ ஜாக் பேரமைப்பினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் திருவள்ளூர் டிட்டோ ஜாக் மாவட்ட நிர்வாகிகள் ஜான், பாலுமகேந்திரன், சிவகுமார், சூர்யா, வட்டார நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.